சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வைரஸானது மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HKU5-CoV-2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ், மெர்ஸ் வைரஸை உள்ளடக்கிய மெர்பெகோவைரஸ் துணை வகையைச் சேர்ந்தது என குறிப்பிடப்படுகின்றது.
கொரோனா போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் கொரோனாவுக்கு காரணமான வைரஸான SARS-CoV-2 போன்ற அதே மனிதர்களுக்கு பரவும் ACE2 உடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் MERS வைரஸை உள்ளடக்கிய மெர்பெகோவைரஸ் துணை வகையைச் சேர்ந்தது.
இது ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய பைபிஸ்ட்ரெல் வௌவால்களில் முதன்முதலில் கண்டறியப்பட்ட HKU5 கொரோனா வைரஸின் புதிய பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத சூழலில் சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் இணங்காணப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியானது தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
'
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு. சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸானது மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.HKU5-CoV-2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ், மெர்ஸ் வைரஸை உள்ளடக்கிய மெர்பெகோவைரஸ் துணை வகையைச் சேர்ந்தது என குறிப்பிடப்படுகின்றது.கொரோனா போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் கொரோனாவுக்கு காரணமான வைரஸான SARS-CoV-2 போன்ற அதே மனிதர்களுக்கு பரவும் ACE2 உடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது.புதிதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் MERS வைரஸை உள்ளடக்கிய மெர்பெகோவைரஸ் துணை வகையைச் சேர்ந்தது.இது ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய பைபிஸ்ட்ரெல் வௌவால்களில் முதன்முதலில் கண்டறியப்பட்ட HKU5 கொரோனா வைரஸின் புதிய பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத சூழலில் சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் இணங்காணப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியானது தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.'