• Feb 15 2025

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க புதிய வாட்ஸ்அப் இலக்கம் - சுற்றாடல் அமைச்சு

Tharmini / Feb 15th 2025, 1:44 pm
image

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 641 20 29 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சி தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைத்து, உடனடி மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிந்து, தொடர் நடவடிக்கைகள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க புதிய வாட்ஸ்அப் இலக்கம் - சுற்றாடல் அமைச்சு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 641 20 29 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறு அனுப்பப்படும் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சி தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைத்து, உடனடி மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிந்து, தொடர் நடவடிக்கைகள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement