• Dec 16 2024

இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த நியூசிலாந்து அரசு ஆதரவு..!

Sharmi / Dec 16th 2024, 4:01 pm
image

இலங்கைக்கு வருடாந்தம் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக நியூசிலாந்து அரசு உறுதியளித்துள்ளது.

அதேவேளை, உணவு பாதுகாப்பு, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த நியூசிலாந்து அரசு முழு ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என உறுதியளித்துள்ளது.

நியூசிலாந்து தூதுவர் டேவிட் பயினுக்கும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் நியூசிலாந்து முதலீடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக நியூசிலாந்து தூதுவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த நியூசிலாந்து அரசு ஆதரவு. இலங்கைக்கு வருடாந்தம் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக நியூசிலாந்து அரசு உறுதியளித்துள்ளது.அதேவேளை, உணவு பாதுகாப்பு, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த நியூசிலாந்து அரசு முழு ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என உறுதியளித்துள்ளது.நியூசிலாந்து தூதுவர் டேவிட் பயினுக்கும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையில் நியூசிலாந்து முதலீடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக நியூசிலாந்து தூதுவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement