• May 08 2024

இலங்கையருக்கு ஏதிலி அந்தஸ்தை வழங்க மறுத்த நியூஸிலாந்து..! samugammedia

Chithra / Jun 15th 2023, 10:04 am
image

Advertisement

இலங்கையைச் சேர்ந்த 33 வயதான புகலிடக் கோரிக்கையாளரின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கையை நியூசிலாந்து நாட்டின் தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது.

அவர் ஏதிலி அல்லது பாதுகாக்கப்பட்ட ஆள் என்ற அந்தஸ்தை வழங்க நியூசிலாந்து குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயம் மறுத்துள்ளது.

நியூசிலாந்தில் பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத நாணய பரிமாற்றம் போன்றவற்றுக்காக தண்டிக்கப்பட்ட அவர், சிறையில் இருந்தபோது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், தாய்நாட்டிற்கு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வாதிட்டார்.

எனினும் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் அவர் 2013 ஆம் ஆண்டில், கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அவரது குடும்பத்தினர் உள்ளூர் அதிகாரிகளுக்கு பணம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், 2014 இல் கல்விக்காக நியூசிலாந்திற்கு இடம்பெயர்ந்ததுடன், பல்வேறு மாணவர் விசாக்களில் அங்கு தங்கியிருந்தார்.

இதன்போதே அவர் போதைப்பொருள் பாவனை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டார் என்று தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

இலங்கையருக்கு ஏதிலி அந்தஸ்தை வழங்க மறுத்த நியூஸிலாந்து. samugammedia இலங்கையைச் சேர்ந்த 33 வயதான புகலிடக் கோரிக்கையாளரின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கையை நியூசிலாந்து நாட்டின் தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது.அவர் ஏதிலி அல்லது பாதுகாக்கப்பட்ட ஆள் என்ற அந்தஸ்தை வழங்க நியூசிலாந்து குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயம் மறுத்துள்ளது.நியூசிலாந்தில் பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத நாணய பரிமாற்றம் போன்றவற்றுக்காக தண்டிக்கப்பட்ட அவர், சிறையில் இருந்தபோது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், தாய்நாட்டிற்கு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வாதிட்டார்.எனினும் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.இலங்கையில் அவர் 2013 ஆம் ஆண்டில், கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.ஆனால் அவரது குடும்பத்தினர் உள்ளூர் அதிகாரிகளுக்கு பணம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இதன் பின்னர், 2014 இல் கல்விக்காக நியூசிலாந்திற்கு இடம்பெயர்ந்ததுடன், பல்வேறு மாணவர் விசாக்களில் அங்கு தங்கியிருந்தார்.இதன்போதே அவர் போதைப்பொருள் பாவனை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டார் என்று தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement