• May 26 2025

நியூசிலாந்தின் துணை பிரதமர் இலங்கை வருகை

Chithra / May 25th 2025, 9:46 am
image

 

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுடன் 4 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் நியூசிலாந்து திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்தின் துணை பிரதமர் இலங்கை வருகை  நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுடன் 4 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர்.அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் நியூசிலாந்து திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement