இலங்கையின் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணமான புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அனர்த்தம் காரணமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நீர்நிலைகள் பெருக்கெடுத்து வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இளைஞன் ஒருவர் திருமணம் முடித்து தனது மனைவியை காரில் அழைத்து செல்வதற்கு பதிலாக படகில் அழைத்து சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளத்சிங்கள பகுதியின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிற்கு படகில் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
வெள்ளத்தால் திருமணமான புதுமண தம்பதிக்கு நேர்ந்த கதி - வைரலாகும் புகைப்படம் இலங்கையின் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணமான புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.அனர்த்தம் காரணமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நீர்நிலைகள் பெருக்கெடுத்து வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.இந் நிலையில் இளைஞன் ஒருவர் திருமணம் முடித்து தனது மனைவியை காரில் அழைத்து செல்வதற்கு பதிலாக படகில் அழைத்து சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புளத்சிங்கள பகுதியின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிற்கு படகில் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.