• May 20 2024

இராணுவத்தினருக்கு மின்சாரத்துறையில் பயிற்சிகளை வழங்க முடியாது-அரசாங்கத்தை எச்சரித்த நிஹால் வீரரத்ன! SamugamMedia

Sharmi / Mar 25th 2023, 11:06 am
image

Advertisement

இலங்கையிலுள்ள மின்சாரத்துறையில் இராணுவ மயமாக்கலை ஏற்படுத்த அரசாங்கம் முற்சிப்பதாகவும் எனவே அதற்கு இடம்கொடுக்கமுடியாதென மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வெளியாட்களுக்கு தமது நிறுவனங்களில் பயிற்சிகளை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக அரசாங்கம் இராணுவ மயமாக்கலை குறிப்பாக துறைமுக அதிகார சபை மற்றும் மின்சார சபைக்கு அறிமுகப்படுத்த முயற்சித்ததை அவதானித்திருந்தாக நிஹால் வீரரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தங்கள் நிறுவனங்களுக்கு வந்து தங்கள் வேலையில் பயிற்சி பெற முயன்றதாகவும் ஆனால் இனிமேல் எங்கள் நிறுவனங்களில் வெளியாட்களுக்கு எந்தவிதமான பயிற்சி நடவடிக்கைகளையும் வழங்கபோவதில்லை என நேற்று ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக நிஹால் வீரரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு மின்சாரத்துறையில் பயிற்சிகளை வழங்க முடியாது-அரசாங்கத்தை எச்சரித்த நிஹால் வீரரத்ன SamugamMedia இலங்கையிலுள்ள மின்சாரத்துறையில் இராணுவ மயமாக்கலை ஏற்படுத்த அரசாங்கம் முற்சிப்பதாகவும் எனவே அதற்கு இடம்கொடுக்கமுடியாதென மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.வெளியாட்களுக்கு தமது நிறுவனங்களில் பயிற்சிகளை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் இவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலமாக அரசாங்கம் இராணுவ மயமாக்கலை குறிப்பாக துறைமுக அதிகார சபை மற்றும் மின்சார சபைக்கு அறிமுகப்படுத்த முயற்சித்ததை அவதானித்திருந்தாக நிஹால் வீரரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.இராணுவத்தினர் தங்கள் நிறுவனங்களுக்கு வந்து தங்கள் வேலையில் பயிற்சி பெற முயன்றதாகவும் ஆனால் இனிமேல் எங்கள் நிறுவனங்களில் வெளியாட்களுக்கு எந்தவிதமான பயிற்சி நடவடிக்கைகளையும் வழங்கபோவதில்லை என நேற்று ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக நிஹால் வீரரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement