• Apr 19 2025

அமெரிக்காவில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து நிக்கி ஹாலே விலகல் ?

Tamil nila / Mar 6th 2024, 8:41 pm
image

அமெரிக்காவில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து நிக்கி ஹாலே விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க  அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இதற்காக கட்சிகளின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாணங்கள் வாரியாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக தெற்கு கரோலினா முன்னாள் கவர்னரான, இந்திய - அமெரிக்கர் நிக்கி ஹாலேவும், அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தனது சொந்த மாகாணமான தெற்கு கரோலினா தேர்தலில் நிக்கிஹாலே தோல்வியடைந்தார்.

சமீபத்தில், 'சூப்பர் செவ்வாய்' எனப்படும், ஒரே நேரத்தில், 21 மாகாணங்களில் நடக்க உள்ள தேர்தலில் குறைவான ஒட்டுக்களே நிக்கிஹாலே பெற்றார். வெர்மாண்ட் மாகாணம் தவிர அனைத்திலும் தோல்வியடைந்தார்.

மேலும் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்வதற்கு, கட்சியின், 1,215 பிரதிநிதிகள் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் நிக்கி ஹாலேவுக்கு, 86 பிரதிநிதிகள் ஆதரவும் ,டிரம்புக்கு, 244 பேரின் ஆதரவும் உள்ளது.


அமெரிக்காவில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து நிக்கி ஹாலே விலகல் அமெரிக்காவில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து நிக்கி ஹாலே விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க  அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இதற்காக கட்சிகளின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாணங்கள் வாரியாக தேர்தல் நடைபெற்று வருகிறது.குறிப்பாக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக தெற்கு கரோலினா முன்னாள் கவர்னரான, இந்திய - அமெரிக்கர் நிக்கி ஹாலேவும், அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தனது சொந்த மாகாணமான தெற்கு கரோலினா தேர்தலில் நிக்கிஹாலே தோல்வியடைந்தார்.சமீபத்தில், 'சூப்பர் செவ்வாய்' எனப்படும், ஒரே நேரத்தில், 21 மாகாணங்களில் நடக்க உள்ள தேர்தலில் குறைவான ஒட்டுக்களே நிக்கிஹாலே பெற்றார். வெர்மாண்ட் மாகாணம் தவிர அனைத்திலும் தோல்வியடைந்தார்.மேலும் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்வதற்கு, கட்சியின், 1,215 பிரதிநிதிகள் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் நிக்கி ஹாலேவுக்கு, 86 பிரதிநிதிகள் ஆதரவும் ,டிரம்புக்கு, 244 பேரின் ஆதரவும் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement