• Nov 28 2024

இரண்டாக உடையும் சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால அணி..? - தீவிர முயற்சியில் சந்திரிக்கா

Chithra / May 13th 2024, 7:55 am
image

 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணி விரைவில் இரண்டாக உடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைக்கு சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிரிந்து ஒரு பிரிவின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா செயற்படுகின்றார்.

இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவு கிடைத்துள்ளது.

அடுத்த பிரிவின் புதிய தலைவராக நேற்று அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவராக இருந்த மைத்திரி, பதவி விலகி விஜயதாசவுக்கு வழிவிட்டு அவரது அணிக்கு ஆதரவாக செயற்படுகின்றார்.

இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா அணியில் உள்ள சிலர், கட்சிப் பதவிகள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருப்பதாகவும்,

அதன் காரணமாக நிமல் சிறிபால டி சில்வா அணியில் இருந்து பிரிந்து தனியாக இயங்க அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

எனினும் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணியை வலுப்படுத்துவதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக இந்தப் பிளவு தடுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இரண்டாக உடையும் சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால அணி. - தீவிர முயற்சியில் சந்திரிக்கா  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணி விரைவில் இரண்டாக உடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போதைக்கு சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிரிந்து ஒரு பிரிவின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா செயற்படுகின்றார்.இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவு கிடைத்துள்ளது.அடுத்த பிரிவின் புதிய தலைவராக நேற்று அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சித் தலைவராக இருந்த மைத்திரி, பதவி விலகி விஜயதாசவுக்கு வழிவிட்டு அவரது அணிக்கு ஆதரவாக செயற்படுகின்றார்.இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா அணியில் உள்ள சிலர், கட்சிப் பதவிகள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருப்பதாகவும்,அதன் காரணமாக நிமல் சிறிபால டி சில்வா அணியில் இருந்து பிரிந்து தனியாக இயங்க அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.எனினும் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணியை வலுப்படுத்துவதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக இந்தப் பிளவு தடுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement