எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதிமன்றில் இடம்பெற்ற வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிராக பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டம் போன்று யாழ்ப்பாணத்திலிருது கிழக்கு நோக்கிய போராட்டத்தை அடக்கும் நோக்கில் வழக்குகள் போடப்பட்டிருந்தன.
இதில் காணாமல் செய்யப்படர்களின் பிரதிநிதிகள், குறித்த போராட்ட அமைப்பு சார்பில் வேழன் சுவாமிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலருக்கு வழக்கு போடப்பட்டு அலக்களிக்கப்பட்டோம்.
இவ்வாறு எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதை காட்டுவதற்காக நாங்களும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றோம்.
சட்டத்தரணிகளும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்து கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் போராட்டத்தை ஒரு போதும் அடக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபிப்போம் என MK சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி கலாரஞ்சினி குறிப்பிடுகையில்,
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பயணத்திலே, அடைப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழக்குகள் மூலம் பல முயற்சிகளை எடுத்தது. பல வழக்கு தவணைகளுக்கு அழைக்கப்பட்டு அலக்களிக்க முடிந்ததே தவிர, எங்களது போராட்டத்தையும், தூரநோக்கு பயணத்தையும் இவர்களால் நசுக்க முடியாமல் போனது.
இன்றைய தினம் நாங்கள் வழக்குக்கு சமூகமளித்திருந்த போது, நீதிமன்றத்தில் கூடியிருந்த அத்தனை சட்டத்தரணிகளும் ஒன்றாக எழுந்து எங்களுக்காக பேசி நீதிபதியினால் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கிடப்பில் போடப்பட்ட வழக்கு எந்த காலப்பகுதியில் மீண்டும் எடுக்கப்பட்டு எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்களோ தெரியவில்லை.
இருந்தாலும், எமது தூரநோக்கத்துக்கான தொடர்ச்சியான போராட்டம், எமக்கான நிரநதரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஜனநாயக ரீதியில் எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் - எம்.கே. சிவாஜிலிங்கம் திட்டவட்டம் எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.கிளிநொச்சி நீதிமன்றில் இடம்பெற்ற வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிராக பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டம் போன்று யாழ்ப்பாணத்திலிருது கிழக்கு நோக்கிய போராட்டத்தை அடக்கும் நோக்கில் வழக்குகள் போடப்பட்டிருந்தன. இதில் காணாமல் செய்யப்படர்களின் பிரதிநிதிகள், குறித்த போராட்ட அமைப்பு சார்பில் வேழன் சுவாமிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலருக்கு வழக்கு போடப்பட்டு அலக்களிக்கப்பட்டோம்.இவ்வாறு எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதை காட்டுவதற்காக நாங்களும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றோம்.சட்டத்தரணிகளும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்து கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் போராட்டத்தை ஒரு போதும் அடக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபிப்போம் என MK சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.இதே வேளை குறித்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி கலாரஞ்சினி குறிப்பிடுகையில்,வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பயணத்திலே, அடைப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழக்குகள் மூலம் பல முயற்சிகளை எடுத்தது. பல வழக்கு தவணைகளுக்கு அழைக்கப்பட்டு அலக்களிக்க முடிந்ததே தவிர, எங்களது போராட்டத்தையும், தூரநோக்கு பயணத்தையும் இவர்களால் நசுக்க முடியாமல் போனது.இன்றைய தினம் நாங்கள் வழக்குக்கு சமூகமளித்திருந்த போது, நீதிமன்றத்தில் கூடியிருந்த அத்தனை சட்டத்தரணிகளும் ஒன்றாக எழுந்து எங்களுக்காக பேசி நீதிபதியினால் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.கிடப்பில் போடப்பட்ட வழக்கு எந்த காலப்பகுதியில் மீண்டும் எடுக்கப்பட்டு எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்களோ தெரியவில்லை.இருந்தாலும், எமது தூரநோக்கத்துக்கான தொடர்ச்சியான போராட்டம், எமக்கான நிரநதரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஜனநாயக ரீதியில் எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.