• May 17 2024

இலங்கைக்கு யார் வந்தாலும் நாடு முன்னேற வாய்ப்பில்லை - சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Oct 7th 2023, 1:31 pm
image

Advertisement

இந்த நாட்டினுடைய பொருளாதார நிலைமை காரணமாக கல்விமான்கள் வெளியில் செல்லும் சூழ்நிலை இருப்பதாக எதிர்கட்சியினரும் அதேநேரத்தில் இந்த சூழ்நிலை தற்போதுள்ள நீண்ட காலமாகவே இந்த செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாக அரசாங்க தரப்பு குற்றம் சாட்டி  கொண்டிருக்கிறது. 

இதற்கு மிகவும் பிரதானமான காரணம் இந மத மொழி அடிப்படையில் சமத்துவமற்ற நிலையில் இலங்கை இருப்பது தான் இலங்கையினுடைய இன்றைய நிலைமைக்கு கரணம் என இலங்கை தமிழரசு கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் பாராளுமன்றில் எரான் விக்கிரமநாயக்க சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் உரையாறியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

மத, இன, மொழி அடிப்படையில் வாழக்கூடிய சூழல் இலங்கையில் உருவாகுமட்டும் இங்கு எந்தவிதமான IMF வந்தால் என்ன யார் வந்தால் என்ன, பொருளாதாரத்தில் எவ்வளவு கொள்கை மாற்றங்கள் செய்தால் என்ன? நாடு எந்த நேரத்திலும்  முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்பதனை நான் மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்வதோடு ஏனென்று சொன்னல் இங்கிருக்கின்ற ஆட்சியாளர்கள் பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனைகளின் அடிப்படையில் தான் ஆட்சியாளர்கள் தீர்மானம் எடுக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இங்கு இருக்கின்ற செயல்பாடுகள் மிக படு மோசமாக போய் கொண்டிருக்கிறது. 

குறிப்பாக வடமாகாணத்தை சேர்ந்த தர்மன் சண்முகரட்ணம் என்பவர் சிங்கப்பூர் ஜனாதிபதியாக தற்பொழுது இருக்கிறார். அவர் சிங்கப்பூரில் ஜனாதிபதியாக வரமுடியுமென்றால் இங்கிருக்கின்ற , நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற நுவரெலியா கல்வி வலய கல்விப்பணிப்பாளர் 75 வீதத்துக்கும் மேற்பட்ட கல்வி வலயமாக இருக்கின்ற தமிழ் பாடசாலைகள் கல்வி வலயமாக இருக்கின்ற போது நுவரெலியா மாவட்ட வலய கல்வி பணிப்பாளர் ஒரு  தமிழ் மொழியில் இருக்கின்ற வலய கல்வி பணிப்பாளராக நியமிப்பதில்லை.

 இதற்கு காரணம் தான் பௌத்த மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையில்  தான் இந்த ஆட்சியாளரினுடைய தீர்மானங்கள் அமைகிறது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் ஒவ்வொரு விடயங்களையும் எடுத்து போது அது எங்களுடைய நாட்டினுடைய பொருளாதாரத்தில் கீழ் நோக்கி செல்கிறது. 

ஆகவே இன மத சூழலில் ஒரு சமத்துவம் உருவாகுமட்டும் இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 


இலங்கைக்கு யார் வந்தாலும் நாடு முன்னேற வாய்ப்பில்லை - சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு.samugammedia இந்த நாட்டினுடைய பொருளாதார நிலைமை காரணமாக கல்விமான்கள் வெளியில் செல்லும் சூழ்நிலை இருப்பதாக எதிர்கட்சியினரும் அதேநேரத்தில் இந்த சூழ்நிலை தற்போதுள்ள நீண்ட காலமாகவே இந்த செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாக அரசாங்க தரப்பு குற்றம் சாட்டி  கொண்டிருக்கிறது. இதற்கு மிகவும் பிரதானமான காரணம் இந மத மொழி அடிப்படையில் சமத்துவமற்ற நிலையில் இலங்கை இருப்பது தான் இலங்கையினுடைய இன்றைய நிலைமைக்கு கரணம் என இலங்கை தமிழரசு கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பாராளுமன்றில் எரான் விக்கிரமநாயக்க சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் உரையாறியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மத, இன, மொழி அடிப்படையில் வாழக்கூடிய சூழல் இலங்கையில் உருவாகுமட்டும் இங்கு எந்தவிதமான IMF வந்தால் என்ன யார் வந்தால் என்ன, பொருளாதாரத்தில் எவ்வளவு கொள்கை மாற்றங்கள் செய்தால் என்ன நாடு எந்த நேரத்திலும்  முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்பதனை நான் மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்வதோடு ஏனென்று சொன்னல் இங்கிருக்கின்ற ஆட்சியாளர்கள் பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனைகளின் அடிப்படையில் தான் ஆட்சியாளர்கள் தீர்மானம் எடுக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இங்கு இருக்கின்ற செயல்பாடுகள் மிக படு மோசமாக போய் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடமாகாணத்தை சேர்ந்த தர்மன் சண்முகரட்ணம் என்பவர் சிங்கப்பூர் ஜனாதிபதியாக தற்பொழுது இருக்கிறார். அவர் சிங்கப்பூரில் ஜனாதிபதியாக வரமுடியுமென்றால் இங்கிருக்கின்ற , நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற நுவரெலியா கல்வி வலய கல்விப்பணிப்பாளர் 75 வீதத்துக்கும் மேற்பட்ட கல்வி வலயமாக இருக்கின்ற தமிழ் பாடசாலைகள் கல்வி வலயமாக இருக்கின்ற போது நுவரெலியா மாவட்ட வலய கல்வி பணிப்பாளர் ஒரு  தமிழ் மொழியில் இருக்கின்ற வலய கல்வி பணிப்பாளராக நியமிப்பதில்லை. இதற்கு காரணம் தான் பௌத்த மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையில்  தான் இந்த ஆட்சியாளரினுடைய தீர்மானங்கள் அமைகிறது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் ஒவ்வொரு விடயங்களையும் எடுத்து போது அது எங்களுடைய நாட்டினுடைய பொருளாதாரத்தில் கீழ் நோக்கி செல்கிறது. ஆகவே இன மத சூழலில் ஒரு சமத்துவம் உருவாகுமட்டும் இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement