• May 06 2024

வடக்கு கிழக்கில் ஊடக சுதந்திரம் இல்லை - சபையில் கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு..!samugammedia

Tharun / Dec 8th 2023, 7:21 pm
image

Advertisement

யுத்த காலத்தில் ஊடகவியாலர்கள் மீது பெருமளவான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இதற்கான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என செல்வராசா  கஜேந்திரன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.  

இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்  போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

ஊடகவியாலர்களின் தகைமைகளை விருத்தி செய்வதற்கு  ஊடக கற்கை நெறியை ஊடக அமைச்சு விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடக அலகு ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களை மேம்படுத்துகின்ற திட்டத்தை ஊடக அமைச்சு மேற்கொள்ள வேண்டும். 

2022 இல் ஊடகவியாலர்களுக்கு காப்புறுதி திட்டம் ஒன்று அறிமுக்கப்படுத்தப்பட்டது. அது 2022 இல் செயற்பாட்டில் இல்லாமல் போனது. ஊடக அமைச்சு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.  யுத்த காலத்தில் ஊடகவியாலர்கள் மீது பெருமளவான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இதற்கான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

அச்சுறுத்தலான சூழலில் ஊடகவியாலர்கள் இன்னமும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாகவே உள்ளது. எனவே இந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் நிலை நாட்டப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் ஊடக சுதந்திரம் இல்லை - சபையில் கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு.samugammedia யுத்த காலத்தில் ஊடகவியாலர்கள் மீது பெருமளவான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இதற்கான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என செல்வராசா  கஜேந்திரன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.  இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்  போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஊடகவியாலர்களின் தகைமைகளை விருத்தி செய்வதற்கு  ஊடக கற்கை நெறியை ஊடக அமைச்சு விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடக அலகு ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களை மேம்படுத்துகின்ற திட்டத்தை ஊடக அமைச்சு மேற்கொள்ள வேண்டும். 2022 இல் ஊடகவியாலர்களுக்கு காப்புறுதி திட்டம் ஒன்று அறிமுக்கப்படுத்தப்பட்டது. அது 2022 இல் செயற்பாட்டில் இல்லாமல் போனது. ஊடக அமைச்சு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.  யுத்த காலத்தில் ஊடகவியாலர்கள் மீது பெருமளவான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இதற்கான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அச்சுறுத்தலான சூழலில் ஊடகவியாலர்கள் இன்னமும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாகவே உள்ளது. எனவே இந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் நிலை நாட்டப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement