• May 23 2026

இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

Chithra / Dec 30th 2025, 6:58 pm
image

 

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், வெளியேறும் முனையத்தில் புதிய தானியங்கி நுழைவாயில்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

குறித்த திட்டம் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது. 

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1,170 மில்லியன் யென் மானிய உதவியின் கீழ் இப்பணிகள் இடம்பெறுகின்றன. 

 தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான எல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின்" ஒரு பகுதியாக இது ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்படி விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ஏற்கனவே 04 தானியங்கி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் ஊடாக பயணிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. 

வருகை மற்றும் வெளியேறு முனையங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியான தானியங்கி முறையை பின்பற்றுவதன் மூலம், பயணிகளைச் சோதனையிடும் நடவடிக்கைகளில் அதிக துல்லியம் மற்றும் வேகத்தை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி  கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், வெளியேறும் முனையத்தில் புதிய தானியங்கி நுழைவாயில்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த திட்டம் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1,170 மில்லியன் யென் மானிய உதவியின் கீழ் இப்பணிகள் இடம்பெறுகின்றன.  தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான எல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின்" ஒரு பகுதியாக இது ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ஏற்கனவே 04 தானியங்கி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் ஊடாக பயணிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. வருகை மற்றும் வெளியேறு முனையங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியான தானியங்கி முறையை பின்பற்றுவதன் மூலம், பயணிகளைச் சோதனையிடும் நடவடிக்கைகளில் அதிக துல்லியம் மற்றும் வேகத்தை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement