தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
ருஹுணு, ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசாங்கம் அரசியல் விளையாடுகின்றது.
இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்.
அமைப்பை மாற்ற வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, அதே பழைய பாதையில் தொடர்கிறது.
அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சமந்த குமாரவின் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்றவருக்குப் பதிலாக, இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்றவரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூட பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவை பாதிக்க முடியாது என்றும், இந்த நிலையை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
'பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் வேண்டாம்' - சபையில் சஜித் வேண்டுகோள். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்ருஹுணு, ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசாங்கம் அரசியல் விளையாடுகின்றது.இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்.அமைப்பை மாற்ற வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, அதே பழைய பாதையில் தொடர்கிறது.அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சமந்த குமாரவின் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்றவருக்குப் பதிலாக, இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்றவரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூட பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவை பாதிக்க முடியாது என்றும், இந்த நிலையை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.