• Nov 28 2024

கன மழையால் மூதூரில் மக்களின் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Tharmini / Nov 27th 2024, 11:13 am
image

சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெய்துவரும் கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு,மல்லிகைத்தீவு,பச்சநூர்,சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை மேவி நான்காவது வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது.இதனால் இவ் வீதியூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது.

அத்தோடு மூதூர் -அறபாநகர், பாலநகர் கிராமங்களிலுள்ள ச வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளது.அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு மக்கள் பயன்படுத்துகின்ற பல வீதிகளில் வெள்ளநீர் செல்வதையும் காணமுடிகிறது.





கன மழையால் மூதூரில் மக்களின் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெய்துவரும் கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு,மல்லிகைத்தீவு,பச்சநூர்,சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை மேவி நான்காவது வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது.இதனால் இவ் வீதியூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது.அத்தோடு மூதூர் -அறபாநகர், பாலநகர் கிராமங்களிலுள்ள ச வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளது.அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு மக்கள் பயன்படுத்துகின்ற பல வீதிகளில் வெள்ளநீர் செல்வதையும் காணமுடிகிறது.

Advertisement

Advertisement

Advertisement