• Dec 14 2024

வட்டுவாகல் பாலத்தினூடாக பயணம் செய்யும் பயணிகள் : அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ளவும்

Tharmini / Nov 27th 2024, 11:28 am
image

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிபாலம் வெளியே தெரியாதபடி இருந்த காரணத்தினால்,

வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் நீர் வடிந்திருந்தது.

மீண்டும் தாெடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக மீண்டும் வட்டுவாகல் பாலம் ஆங்காங்கே நீரினால் பாலத்தினை குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனால் குறித்த பாலம் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளவும்.






வட்டுவாகல் பாலத்தினூடாக பயணம் செய்யும் பயணிகள் : அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ளவும் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிபாலம் வெளியே தெரியாதபடி இருந்த காரணத்தினால்,வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் நீர் வடிந்திருந்தது.மீண்டும் தாெடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக மீண்டும் வட்டுவாகல் பாலம் ஆங்காங்கே நீரினால் பாலத்தினை குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனால் குறித்த பாலம் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளவும்.

Advertisement

Advertisement

Advertisement