• May 23 2025

தனியார் பேருந்து சேவை தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிவிப்பு..!

Sharmi / May 22nd 2025, 3:11 pm
image

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில் உறுதியளித்திருந்த நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக ஆளுநர் அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில்   769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த அறிவித்தலை ஆளுநர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தனியார் பேருந்து சேவை தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிவிப்பு. 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில் உறுதியளித்திருந்த நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக ஆளுநர் அறிவுறுத்தினார்.யாழ்ப்பாணத்தில்   769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த அறிவித்தலை ஆளுநர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement