• May 20 2024

வைத்தியசாலைக்கு சென்ற அனைவரும் உயிர் பிழைப்பதில்லை! அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளன! அமைச்சர் கெஹலிய samugammedia

Chithra / Jul 19th 2023, 12:35 pm
image

Advertisement

சுமார் 100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் அமைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது உண்மை என்றும், யாரேனும் சுகாதார அமைச்சர் பதவி பெற நினைத்தால் அது வேறு கதை என்றும் அவர் கூறினார்.

சர்ச்சைக்குரிய மருந்து விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகிறது எனவும், தடுப்பூசி போடப்பட்ட மேலும் 12 பேர் அப்போது யுவதி இருந்த வார்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


வைத்தியசாலைக்கு சென்ற அனைவரும் உயிர் பிழைப்பதில்லை அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளன அமைச்சர் கெஹலிய samugammedia சுமார் 100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் அமைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அது உண்மை என்றும், யாரேனும் சுகாதார அமைச்சர் பதவி பெற நினைத்தால் அது வேறு கதை என்றும் அவர் கூறினார்.சர்ச்சைக்குரிய மருந்து விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகிறது எனவும், தடுப்பூசி போடப்பட்ட மேலும் 12 பேர் அப்போது யுவதி இருந்த வார்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement