• Jan 05 2025

ஏ.எல் பரீட்சையில் திருப்தி இல்லை; யாழில் மாணவி விபரீத முடிவு..!

Sharmi / Dec 31st 2024, 10:31 pm
image

உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் யாழில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்ற மாணவியொருவர் இம்முறை இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்தார்.

இந்நிலையில்,  குறித்த மாணவி நேற்றையதினம்(30) பரீட்சைக்கு தோற்றி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய், தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். 

பின்னர் அவரது தந்தை கடமை நிமிர்த்தம் வெளியே சென்றவேளை, குறித்த மாணவி வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் எனவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏ.எல் பரீட்சையில் திருப்தி இல்லை; யாழில் மாணவி விபரீத முடிவு. உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் யாழில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்ற மாணவியொருவர் இம்முறை இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்தார்.இந்நிலையில்,  குறித்த மாணவி நேற்றையதினம்(30) பரீட்சைக்கு தோற்றி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய், தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். பின்னர் அவரது தந்தை கடமை நிமிர்த்தம் வெளியே சென்றவேளை, குறித்த மாணவி வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் எனவும் தெரியவருகின்றது.இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement