• Nov 19 2024

தேர்தலை பகிஸ்கரிப்பதால் எதையும் சாதிக்க முடியாது...! வாக்கு பலத்தின் மூலமே எமக்கெதிரானவர்களை தோற்கடிக்கலாம்...!இரா.துரைரெட்னம் வலியுறுத்து...!

Sharmi / May 20th 2024, 1:47 pm
image

தேர்தல்களை பகிஸ்கரிப்பதனால் நாங்கள் எதனையும் சாதித்துவிடமுடியாது எனவும் வாக்களிப்பின் ஊடாக சிறுபான்மையினர் தமது உரிமையினை வலியுறுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம்(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் முடிவெடுப்பது அவர்களது ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமைகளை நாங்கள் மதிக்கின்றோம்.

ஆனால், அந்த ஜனநாயக உரிமை என்பது எந்தளவிற்கு வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பலத்தை பாதுகாக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.

அதேவேளை, தமிழர்களாகிய எம்மிடம் இருக்கின்ற ஒரே ஒரு பலம் வாக்கு மட்டுமே.  எனவே அதனை இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் பால் ஈர்க்கும் முகமாக ஒவ்வொரு தமிழர்களும் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது மௌனிக்கப்பட்ட விடயம். பகிஸ்கரிப்பால் எதையும் சாதிக்க முடியாது.

எனவே, ஒவ்வொரு தமிழனும் எமக்கெதிராக செயற்பட்டவர்களை வாக்களிப்பு மூலமாக தோற்கடிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை எனவும் தெரிவித்தார்.





தேர்தலை பகிஸ்கரிப்பதால் எதையும் சாதிக்க முடியாது. வாக்கு பலத்தின் மூலமே எமக்கெதிரானவர்களை தோற்கடிக்கலாம்.இரா.துரைரெட்னம் வலியுறுத்து. தேர்தல்களை பகிஸ்கரிப்பதனால் நாங்கள் எதனையும் சாதித்துவிடமுடியாது எனவும் வாக்களிப்பின் ஊடாக சிறுபான்மையினர் தமது உரிமையினை வலியுறுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம்(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் முடிவெடுப்பது அவர்களது ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமைகளை நாங்கள் மதிக்கின்றோம்.ஆனால், அந்த ஜனநாயக உரிமை என்பது எந்தளவிற்கு வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பலத்தை பாதுகாக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.அதேவேளை, தமிழர்களாகிய எம்மிடம் இருக்கின்ற ஒரே ஒரு பலம் வாக்கு மட்டுமே.  எனவே அதனை இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் பால் ஈர்க்கும் முகமாக ஒவ்வொரு தமிழர்களும் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும்.அதைவிடுத்து தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது மௌனிக்கப்பட்ட விடயம். பகிஸ்கரிப்பால் எதையும் சாதிக்க முடியாது.எனவே, ஒவ்வொரு தமிழனும் எமக்கெதிராக செயற்பட்டவர்களை வாக்களிப்பு மூலமாக தோற்கடிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement