தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.health.gov.lk/) வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையதளத்தைப் பார்த்து, நேர்காணலின் திகதி, இடம் மற்றும் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்துள்ளது.
2019/2020 க.பொ.த உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த 4000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இம்மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி 18ஆம் திகதி வரை மாணவர் தாதியர் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான முதற்கட்ட தகுதித் தேர்வு நேர்காணல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான அறிவிப்பு தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.health.gov.lk/) வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையதளத்தைப் பார்த்து, நேர்காணலின் திகதி, இடம் மற்றும் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்துள்ளது.2019/2020 க.பொ.த உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த 4000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.இம்மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி 18ஆம் திகதி வரை மாணவர் தாதியர் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான முதற்கட்ட தகுதித் தேர்வு நேர்காணல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது