• Apr 18 2026

எரிபொருளை பெற வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு

Chithra / Mar 18th 2026, 7:23 pm
image


எரிபொருள் விநியோகத்தின்போது வாகனத்தின் அடையாளத்தைத் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்காக, தேவையான சந்தர்ப்பங்களில் கீழ்வரும் ஆவணங்களில் ஒன்றினை முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம், வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்புறுதிச் சான்றிதழ், வாகனப் புகைப்பரிசோதனைச் சான்றிதழ் என்பனவற்றில் ஒன்றை காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. 

கொள்வனவு நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்படவில்லை. 

இதன் காரணமாக, பல வாகன உரிமையாளர்கள் பல்வேறு விதமான தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, மேற்குறிப்பிட்ட நான்கு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிக்க முடியும் எனத் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

எரிபொருளை பெற வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு எரிபொருள் விநியோகத்தின்போது வாகனத்தின் அடையாளத்தைத் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்காக, தேவையான சந்தர்ப்பங்களில் கீழ்வரும் ஆவணங்களில் ஒன்றினை முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம், வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்புறுதிச் சான்றிதழ், வாகனப் புகைப்பரிசோதனைச் சான்றிதழ் என்பனவற்றில் ஒன்றை காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. கொள்வனவு நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் விநியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக, பல வாகன உரிமையாளர்கள் பல்வேறு விதமான தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, மேற்குறிப்பிட்ட நான்கு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிக்க முடியும் எனத் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement