• Aug 20 2025

சி.ஐ.டியில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அறிவிப்பு

Chithra / Aug 19th 2025, 3:50 pm
image

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பும்போது பல்கலைக்கழக நிகழ்வுக்காக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்காக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சி.ஐ.டியில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அறிவிப்பு இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பும்போது பல்கலைக்கழக நிகழ்வுக்காக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்காக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement