• Nov 28 2024

இலங்கையில் பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து நிர்வாண புகைப்பட மோசடி அதிகரிப்பு!

Chithra / Nov 21st 2024, 2:47 pm
image

 

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் காணப்படும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றி,

உரிய மாணவிகளிடம் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களை அச்சுறுத்தி பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த மோசடி கும்பலுக்கு அஞ்சி தங்களது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பலின் ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர்.

இவ்வாறான சம்பங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் உயர் தர மாணவிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து நிர்வாண புகைப்பட மோசடி அதிகரிப்பு  இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் காணப்படும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றி,உரிய மாணவிகளிடம் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களை அச்சுறுத்தி பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த மோசடி கும்பலுக்கு அஞ்சி தங்களது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பலின் ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர்.இவ்வாறான சம்பங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் உயர் தர மாணவிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement