கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் முதன்மைச்சுடரை நான்கு(4) மாவீரர்களின் சகோதரரான சி.சிவநேசன் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேலும் யாழ். தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
படவிளக்கம்
இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் வாரத்தின் முதல் நாள் இன்று - கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதில் முதன்மைச்சுடரை நான்கு(4) மாவீரர்களின் சகோதரரான சி.சிவநேசன் ஏற்றி வைத்தார்.தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.மேலும் யாழ். தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.இதன்போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.படவிளக்கம்இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.