• Oct 30 2024

இலங்கையில் உயரம் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! samugammedia

Chithra / May 23rd 2023, 10:44 am
image

Advertisement

இலங்கையில் உயரம் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2021ஆம் ஆண்டில் 5 முதல் 10 வயது வரையிலான சிறார்கள் மத்தியில் உயரம் குறைந்தவர்கள் எண்ணிக்கை 21 வீதமாக காணப்பட்டது.

எனினும், கடந்த 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 26 வீதமாக உயர்வடைந்துள்ளது. மந்த போசனைக்கு உள்ளான சிறுவர் சிறுமியரே இவ்வாறு உயரம் குறைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயரம் குறைவது பொதுவாக போசாக்கின்மை பிரச்சினைகளினால் ஏற்படுவது எனவும், இதனால் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும் எனவும் உலக உணவுத் திட்டத்தின் இணைப்புச் செயலாளர் டொக்டர் கலன பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிள்ளையொன்றின் வளர்ச்சியில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியமானது எனவும், அதன் அடிப்படையில் அடுத்த 7000 நாட்களில் கிரமமான வளர்ச்சி இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.



நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் பெரும்பானலானவர்களினால் போசாக்கான உணவை உட்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். 


இலங்கையில் உயரம் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு samugammedia இலங்கையில் உயரம் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டில் 5 முதல் 10 வயது வரையிலான சிறார்கள் மத்தியில் உயரம் குறைந்தவர்கள் எண்ணிக்கை 21 வீதமாக காணப்பட்டது.எனினும், கடந்த 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 26 வீதமாக உயர்வடைந்துள்ளது. மந்த போசனைக்கு உள்ளான சிறுவர் சிறுமியரே இவ்வாறு உயரம் குறைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.உயரம் குறைவது பொதுவாக போசாக்கின்மை பிரச்சினைகளினால் ஏற்படுவது எனவும், இதனால் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும் எனவும் உலக உணவுத் திட்டத்தின் இணைப்புச் செயலாளர் டொக்டர் கலன பீரிஸ் தெரிவித்துள்ளார்.பிள்ளையொன்றின் வளர்ச்சியில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியமானது எனவும், அதன் அடிப்படையில் அடுத்த 7000 நாட்களில் கிரமமான வளர்ச்சி இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் பெரும்பானலானவர்களினால் போசாக்கான உணவை உட்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement