• Jan 16 2025

இரண்டு மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

Chithra / Dec 26th 2024, 3:42 pm
image

 

 இந்த வருடம் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கலாசார ரீதியாக வரவேற்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். 

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் டிசம்பர் 22 ஆம் திகதி வரை 19,72,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். 

இதன்படி, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஸ்யா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இரண்டு மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை   இந்த வருடம் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கலாசார ரீதியாக வரவேற்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் டிசம்பர் 22 ஆம் திகதி வரை 19,72,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இதன்படி, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஸ்யா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement