• May 20 2024

கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள்! வெளியான அதிர்ச்சி அறிக்கை samugammedia

Chithra / Oct 1st 2023, 7:59 am
image

Advertisement

  

கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் என தெரிவந்துள்ளது. 

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

சிறையில் அடைக்கப்பட்ட பட்டதாரிகளில் பெண்கள் 41 பேரும் ஆண்கள் 2,299 பேரும் உள்ளனர். 

கடந்த மூன்று ஆண்டுகளில் கடந்த ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பை விட உயர்கல்வி பெற்ற 121 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 8420 ஆகும்.

சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 7168 ஆகும். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் மிகக் குறைவானவர்களே பாடசாலைக்கு செல்லாதவர்களாகும், அவர்களின் எண்ணிக்கை 836 பேராகும்.

கடந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தியடைந்த 6,747 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட மொத்த 30,331 கைதிகளில் 17,928 பேர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் என்பதையும் இந்தத் தரவு காட்டுகிறது.


கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் வெளியான அதிர்ச்சி அறிக்கை samugammedia   கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் என தெரிவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பட்டதாரிகளில் பெண்கள் 41 பேரும் ஆண்கள் 2,299 பேரும் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் கடந்த ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பை விட உயர்கல்வி பெற்ற 121 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 8420 ஆகும்.சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 7168 ஆகும். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் மிகக் குறைவானவர்களே பாடசாலைக்கு செல்லாதவர்களாகும், அவர்களின் எண்ணிக்கை 836 பேராகும்.கடந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தியடைந்த 6,747 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட மொத்த 30,331 கைதிகளில் 17,928 பேர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் என்பதையும் இந்தத் தரவு காட்டுகிறது.

Advertisement

Advertisement

Advertisement