• Dec 13 2024

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பில் அதிகாரிகள் விசனம்..! நடந்தது என்ன?

Sharmi / Dec 13th 2024, 3:37 pm
image

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்(13) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்பில் அங்கு கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் விசனம் தெரிவித்ததுடன் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தமையை அவதானிக்க முடிந்தது.

யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற  மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே  இவ்வாறான நிலை ஏற்பட்டது.

குறித்த கூட்டத்தில் இம்முறை பாராளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா அதிகாரிகளை விழித்த வார்த்தைகள் சபை ஒழுங்குக்கும் கூட்டம் ஒழுங்குக்கும் முரணாக இருப்பதாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டினர்.

அதாவது நகர அபிவிருத்தி தொடர்பான விவாதத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வருகை தந்த துறை சார்ந்த பெண் உயர் அதிகாரி ஒருவரை "அன்ரி" உங்கள் முகம் வியர்க்கிறது உங்களுக்கு திட்டமிடல் என்றால் என்ன என தெரியுமா என கேட்டார்.

அதுமட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை "தங்கம்" "முத்து "என அடிக்கடி கூறியதுடன் அவரின் கல்வித் தகமை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார். 

மாகாண அதிகாரி ஒருவரை படையப்பா படம் பார்த்தீர்களா பத்து மில்லியனை 10 நாளில் எப்படி செலவளிப்பீர்கள் தனக்கு கூறுமாறு அடிக்கடி குறுக்குடு செய்து கேள்விகளை தொடுத்தார்.

அது மட்டுமல்லாது யாழ் மாவட்டத்தில் திட்டங்களை வகுக்கும்போது உங்கள் கல்வி அறிவு போதாது என அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவ்வாறு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள் கற்றுத் தருகிறேன் என கிண்டல் அடித்தார்.

இவ்வாறான நிலை ஏற்பட்டபோது அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் வடமகன ஆளுநர் வேதநாயகன் மற்றும்  பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதிபன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பில் அதிகாரிகள் விசனம். நடந்தது என்ன யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்(13) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்பில் அங்கு கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் விசனம் தெரிவித்ததுடன் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தமையை அவதானிக்க முடிந்தது.யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற  மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே  இவ்வாறான நிலை ஏற்பட்டது.குறித்த கூட்டத்தில் இம்முறை பாராளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா அதிகாரிகளை விழித்த வார்த்தைகள் சபை ஒழுங்குக்கும் கூட்டம் ஒழுங்குக்கும் முரணாக இருப்பதாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டினர்.அதாவது நகர அபிவிருத்தி தொடர்பான விவாதத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வருகை தந்த துறை சார்ந்த பெண் உயர் அதிகாரி ஒருவரை "அன்ரி" உங்கள் முகம் வியர்க்கிறது உங்களுக்கு திட்டமிடல் என்றால் என்ன என தெரியுமா என கேட்டார்.அதுமட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை "தங்கம்" "முத்து "என அடிக்கடி கூறியதுடன் அவரின் கல்வித் தகமை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார். மாகாண அதிகாரி ஒருவரை படையப்பா படம் பார்த்தீர்களா பத்து மில்லியனை 10 நாளில் எப்படி செலவளிப்பீர்கள் தனக்கு கூறுமாறு அடிக்கடி குறுக்குடு செய்து கேள்விகளை தொடுத்தார்.அது மட்டுமல்லாது யாழ் மாவட்டத்தில் திட்டங்களை வகுக்கும்போது உங்கள் கல்வி அறிவு போதாது என அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவ்வாறு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள் கற்றுத் தருகிறேன் என கிண்டல் அடித்தார்.இவ்வாறான நிலை ஏற்பட்டபோது அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் வடமகன ஆளுநர் வேதநாயகன் மற்றும்  பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதிபன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement