• Apr 08 2025

தேங்காய் விலை அதிகரிப்பின் எதிரொலி - நிறுத்தப்பட்டது எண்ணெய் உற்பத்தி!

Chithra / Dec 12th 2024, 8:06 am
image

 

உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். 

தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் கிலோவொன்றின் விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இரசாயன உரங்களைத் தடை செய்தமையால் தேங்காயின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். 

அத்துடன், தென்னை பயிர்ச்செய்கையின் வீழ்ச்சிக்குப் பீடைகளின் தாக்கமும் காரணமாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேங்காய் விலை அதிகரிப்பின் எதிரொலி - நிறுத்தப்பட்டது எண்ணெய் உற்பத்தி  உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் கிலோவொன்றின் விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரசாயன உரங்களைத் தடை செய்தமையால் தேங்காயின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், தென்னை பயிர்ச்செய்கையின் வீழ்ச்சிக்குப் பீடைகளின் தாக்கமும் காரணமாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now