• Jul 27 2024

டெலிவரி செய்யப்பட்ட பார்சல் - திறந்ததும் மயங்கி விழுந்த முதியவர் ! samugammedia

Tamil nila / Oct 27th 2023, 8:54 pm
image

Advertisement

பிரபல ஒன்லைன் வணிக நிறுவனத்தில் மின்வயரை ஆர்டர் செய்த முதியவருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழக மாவட்டம், நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர், கடந்த 18ம் திகதி வீட்டிற்கு தேவையான மின்சார வயரை ஒன்லைன் வணிக நிறுவனம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார்.

பின்பு, அதற்கான தொகை 990 ரூபாயையும் 21ம் திகதி ஒன்லைனில் செலுத்தினார். இந்நிலையில், நேற்று மாலை வணிக நிறுவனத்தில் இருந்து பார்சல் டெலிவரி வந்துள்ளது.அதனை வாங்கி வைத்த வேலாயுதம், வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க சென்றுவிட்டார். பின்னர், பார்சலை பிரித்து பார்த்த போது மின் வயருக்கு பதிலாக காலி மதுபாட்டில் இருந்துள்ளது. இதனை பார்த்து வேலாயுதம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பாக வேலாயுதம் கூறுகையில், “நான் இதுவரை பல முறை ஒன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன். ஆனால், இதுவரை இப்படி நடந்ததில்லை. பொதுமக்களிடம் ஒன்லைன் மோகம் அதிகரித்து வரும் நேரத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நான் பார்சலை திறந்து பார்த்த போது மயங்கிவிட்டேன். நான் ஒரு இருதய நோயாளி. இது சம்மந்தப்பட்ட வணிக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


டெலிவரி செய்யப்பட்ட பார்சல் - திறந்ததும் மயங்கி விழுந்த முதியவர் samugammedia பிரபல ஒன்லைன் வணிக நிறுவனத்தில் மின்வயரை ஆர்டர் செய்த முதியவருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது.தமிழக மாவட்டம், நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர், கடந்த 18ம் திகதி வீட்டிற்கு தேவையான மின்சார வயரை ஒன்லைன் வணிக நிறுவனம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார்.பின்பு, அதற்கான தொகை 990 ரூபாயையும் 21ம் திகதி ஒன்லைனில் செலுத்தினார். இந்நிலையில், நேற்று மாலை வணிக நிறுவனத்தில் இருந்து பார்சல் டெலிவரி வந்துள்ளது.அதனை வாங்கி வைத்த வேலாயுதம், வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க சென்றுவிட்டார். பின்னர், பார்சலை பிரித்து பார்த்த போது மின் வயருக்கு பதிலாக காலி மதுபாட்டில் இருந்துள்ளது. இதனை பார்த்து வேலாயுதம் அதிர்ச்சியடைந்துள்ளார்.இது தொடர்பாக வேலாயுதம் கூறுகையில், “நான் இதுவரை பல முறை ஒன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன். ஆனால், இதுவரை இப்படி நடந்ததில்லை. பொதுமக்களிடம் ஒன்லைன் மோகம் அதிகரித்து வரும் நேரத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.நான் பார்சலை திறந்து பார்த்த போது மயங்கிவிட்டேன். நான் ஒரு இருதய நோயாளி. இது சம்மந்தப்பட்ட வணிக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Advertisement

Advertisement

Advertisement