• Oct 02 2024

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் போராட்டம்..!

Sharmi / Oct 1st 2024, 1:20 pm
image

Advertisement

சர்வதேச சிறுவர் தினமாகிய இன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு,  காணாமல் ஆக்கப்பட்ட தங்களது 29 க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு நீதி கோரி குறித்த போராட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இறுதி யுத்தத்தின் போது குடும்பங்களாக கையளித்த போது 29 சிறுவர்கள் கையளிக்கப்பட்டு இதில் எந்த சிறுவர்களும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்றும், இந்த உறவுகளினுடைய வருகைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற 250க்கும் மேற்பட்டவர்கள் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்கான நீதியை இந்த சர்வதேச தினத்திலாவது பெற்றுத் தருமாறு கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் போராட்டம். சர்வதேச சிறுவர் தினமாகிய இன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு,  காணாமல் ஆக்கப்பட்ட தங்களது 29 க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு நீதி கோரி குறித்த போராட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.இறுதி யுத்தத்தின் போது குடும்பங்களாக கையளித்த போது 29 சிறுவர்கள் கையளிக்கப்பட்டு இதில் எந்த சிறுவர்களும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்றும், இந்த உறவுகளினுடைய வருகைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற 250க்கும் மேற்பட்டவர்கள் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்கான நீதியை இந்த சர்வதேச தினத்திலாவது பெற்றுத் தருமாறு கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement