• Nov 26 2024

ஆண்டின் முதல் நாளிலேயே இலங்கையர்களுக்கு பேரதிர்ச்சி..! எரிபொருள் விலை அதிகரிப்பு..!

Chithra / Jan 1st 2024, 6:50 am
image

 

இன்று அதிகாலை 5 மணி   முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.

அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 366 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 38 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 464 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு லீற்றர் இலங்கை வெள்ளை டீசலின் விலை 29 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 358 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் இலங்கை சுப்பர் டீசலின் விலை 41 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 475 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 236 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த விலை மாற்றங்கள் இன்று அதிகாலை 5.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த விலை மாற்றத்திற்கு நிகராக ஏனைய நிறுவனங்களும் விலை மாற்றத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆண்டின் முதல் நாளிலேயே இலங்கையர்களுக்கு பேரதிர்ச்சி. எரிபொருள் விலை அதிகரிப்பு.  இன்று அதிகாலை 5 மணி   முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இதற்கமைய, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 366 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு லீற்றர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 38 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 464 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.ஒரு லீற்றர் இலங்கை வெள்ளை டீசலின் விலை 29 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 358 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு லீற்றர் இலங்கை சுப்பர் டீசலின் விலை 41 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 475 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 236 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.இந்த விலை மாற்றங்கள் இன்று அதிகாலை 5.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இந்த விலை மாற்றத்திற்கு நிகராக ஏனைய நிறுவனங்களும் விலை மாற்றத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement