• Feb 04 2025

மட்டக்களப்பில் மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் பலி

Chithra / Feb 3rd 2025, 2:57 pm
image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த  மின்சார கம்பியில் சிக்கி  குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்  இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும்  39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.   

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பில் மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் பலி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த  மின்சார கம்பியில் சிக்கி  குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம்  இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும்  39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.   உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement