• Jan 26 2025

டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து - ஒருவர் பலி

Chithra / Jan 12th 2025, 12:49 pm
image

 

டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை இன்வெஸ்ட்மென்ட் கல்பாய சந்தியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து மிரிஜ்ஜவில நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம்,  ஹம்பாந்தோட்டையில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து - ஒருவர் பலி  டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹம்பாந்தோட்டை இன்வெஸ்ட்மென்ட் கல்பாய சந்தியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டையில் இருந்து மிரிஜ்ஜவில நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம்,  ஹம்பாந்தோட்டையில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மற்றுமொருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement