அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவால் கிளீன் ஸ்ரீலங்கா திட்ட நிகழ்வு இன்று (12) நிந்தவூர் பிரதேசசபை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நாட்டிலே பொருளாதாரத்தை கட்டி கட்டி எழுப்பும் முகமாக இந்த நிகழ்வுகள், 2025 இல். அதிமேதகு ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் திகாமடுள்ள மாவட்டத்தில் முதலாவது நிகழ்வாக, நிந்தவூர் பிரதேசசபை வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா நிந்தவூர் பிரதேசசபை வளாகத்தில் கிளீன் சிறிலங்கா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “கிளீன் ஸ்ரீலங்கா என்றால் என்ன என்பது இன்னும் சிலருக்கு புரியாமல் இருக்கின்றது. கடந்த 76 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை சூறையாடி, இந்த நாட்டை ஒரு வீழ்ச்சி அடைந்த நாடாக உலகத்திற்கும் எமக்கும் காட்டி இருக்கிறார்கள்.
இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டினுடைய பொருளாதாரத்தை விஞ்ஞான பூர்வமாக கட்டி எழுப்புவது என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது”
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹீர் மற்றும் நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பிரதேச சபை செயலாளர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.
அம்பாறை பிரதேசசபையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் ஆரம்பிப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவால் கிளீன் ஸ்ரீலங்கா திட்ட நிகழ்வு இன்று (12) நிந்தவூர் பிரதேசசபை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த நாட்டிலே பொருளாதாரத்தை கட்டி கட்டி எழுப்பும் முகமாக இந்த நிகழ்வுகள், 2025 இல். அதிமேதகு ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த அடிப்படையில் திகாமடுள்ள மாவட்டத்தில் முதலாவது நிகழ்வாக, நிந்தவூர் பிரதேசசபை வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா நிந்தவூர் பிரதேசசபை வளாகத்தில் கிளீன் சிறிலங்கா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “கிளீன் ஸ்ரீலங்கா என்றால் என்ன என்பது இன்னும் சிலருக்கு புரியாமல் இருக்கின்றது. கடந்த 76 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை சூறையாடி, இந்த நாட்டை ஒரு வீழ்ச்சி அடைந்த நாடாக உலகத்திற்கும் எமக்கும் காட்டி இருக்கிறார்கள்.இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டினுடைய பொருளாதாரத்தை விஞ்ஞான பூர்வமாக கட்டி எழுப்புவது என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது”இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹீர் மற்றும் நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பிரதேச சபை செயலாளர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.