மஹரகம - பமுன்வ பிரதேசத்தில் இன்று (30) ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பிலியந்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்தார்.
சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கிச் சென்ற உந்துருளி ஒன்றும், ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை நோக்கிச் சென்ற சொகுசு ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து , இரண்டு மகிழுந்துகள் முன்னால் வந்த உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - ஒருவர் பலி மஹரகம - பமுன்வ பிரதேசத்தில் இன்று (30) ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பிலியந்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கிச் சென்ற உந்துருளி ஒன்றும், ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை நோக்கிச் சென்ற சொகுசு ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து , இரண்டு மகிழுந்துகள் முன்னால் வந்த உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்