• Dec 14 2024

ஃபெங்கல் புயல் கரையைக் கடக்கும் திசை தொடர்பில் வெளியான தகவல்!

Tamil nila / Nov 30th 2024, 9:23 pm
image

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ள புயல் எதிர்வரும் மணித்தியாலங்களில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 குறித்த புயலானது இன்று மதியம் 2.30 அளவில் திருகோணமலைக்கு வடக்கே 420 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த புயல் இந்தியாவுக்குள் நுழையும் போது அது படிப்படியாக வலுவிழக்கும் என்பதுடன், இதனால் இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கமும் குறைவடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

 அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வட மாகாணத்தின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

 அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 55 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஃபெங்கல் புயல் கரையைக் கடக்கும் திசை தொடர்பில் வெளியான தகவல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ள புயல் எதிர்வரும் மணித்தியாலங்களில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த புயலானது இன்று மதியம் 2.30 அளவில் திருகோணமலைக்கு வடக்கே 420 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த புயல் இந்தியாவுக்குள் நுழையும் போது அது படிப்படியாக வலுவிழக்கும் என்பதுடன், இதனால் இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கமும் குறைவடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.  அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வட மாகாணத்தின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.  அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 55 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement