• Jan 22 2025

கல்கிஸையில் இன்று துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

Chithra / Jan 19th 2025, 2:09 pm
image

 

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த சவிந்து தரிந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.

களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 

மற்றைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கல்கிஸையில் இன்று துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு  கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த சவிந்து தரிந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மற்றைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement