புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியில் இன்று(19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தொன்று புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் ஆறாம் கட்டைப் பகுதியில் பயணித்த வேளைஇ வீதியில் தரித்து நின்று வீதிக்கு செலுத்த முற்பட்ட லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பேருந்தின் மிதிப்பலகையில் நின்று கொண்டிருந்த இருவர் தவறுதலாக கீழே விழுந்த நிலையில் ஒருவர் மீது ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது மற்றுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த விபத்தில் கருவலகஸ்வெவ 18 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், லொறியின் சாரதி ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
புத்தளம்-அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியில் இன்று(19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தொன்று புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் ஆறாம் கட்டைப் பகுதியில் பயணித்த வேளைஇ வீதியில் தரித்து நின்று வீதிக்கு செலுத்த முற்பட்ட லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, பேருந்தின் மிதிப்பலகையில் நின்று கொண்டிருந்த இருவர் தவறுதலாக கீழே விழுந்த நிலையில் ஒருவர் மீது ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதன்போது மற்றுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். குறித்த விபத்தில் கருவலகஸ்வெவ 18 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், லொறியின் சாரதி ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.