• Nov 22 2024

விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை ; நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா - அநுர கிண்டல்

Anaath / Sep 6th 2024, 7:10 pm
image

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா? என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.

அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், 'அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ளநிலையில் நாட்டுமக்கள் அதனை விரும்பமாட்டார்கள்' என்று விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாகவே, விக்னேஸ்வரன் கூறுவதை தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்தவேண்டும் என்று அநுர தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகில் எந்தவொரு நாட்டை யும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கங்கள் இன்னொரு அரசாங்கங்களுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன. தனி நபருக்கு அல்ல.

ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன். சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன் - என தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை ; நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா - அநுர கிண்டல் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், 'அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது.நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ளநிலையில் நாட்டுமக்கள் அதனை விரும்பமாட்டார்கள்' என்று விமர்சித்திருந்தார்.இதற்குப் பதிலடியாகவே, விக்னேஸ்வரன் கூறுவதை தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்தவேண்டும் என்று அநுர தெரிவித்துள்ளார்.இன்றைய உலகில் எந்தவொரு நாட்டை யும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கங்கள் இன்னொரு அரசாங்கங்களுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன. தனி நபருக்கு அல்ல.ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன். சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன் - என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement