• May 26 2026

ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் படுகாயம் ; கால் துண்டிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

shanu / Sep 23rd 2025, 3:58 pm
image

ஓமந்தையில் ரயில் மோதி  ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் வவுனியா - ஓமந்தைப் பகுதியில் பயணித்த வேளையிலேயே ஒருவர் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார். 



ரயில் மோதி படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் படுகாயம் ; கால் துண்டிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி ஓமந்தையில் ரயில் மோதி  ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் வவுனியா - ஓமந்தைப் பகுதியில் பயணித்த வேளையிலேயே ஒருவர் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார். ரயில் மோதி படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement