• Nov 22 2024

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு...!

Sharmi / May 10th 2024, 2:51 pm
image

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில், அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 07 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக, இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.

பொன்னாலை-பருத்தித்துறை கடற்கரை வீதியில், பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும்  வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன. 

இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடாகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு(J/253), பலாலி தெற்கு(J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. 

இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில், அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 07 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக, இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.பொன்னாலை-பருத்தித்துறை கடற்கரை வீதியில், பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும்  வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடாகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு(J/253), பலாலி தெற்கு(J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement