நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்பதற்காக போதைப்பொருள் கடத்தல் கைது செய்வதை பொலிஸ் நிறுத்தாது .
நெரிசல் பிரச்சினை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தீர்க்க வேண்டிய ஒன்று எனவும், அது தமது அமைச்சுக்கான விடயம் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட "யுக்திய" நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளமையால் சிறைச்சாலை கள் நிரம்பியுள்ளன என்று தெரிவிக்கப்படும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பிரேசன் 'யுக்திய' தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டம்.samugammedia நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்பதற்காக போதைப்பொருள் கடத்தல் கைது செய்வதை பொலிஸ் நிறுத்தாது .நெரிசல் பிரச்சினை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தீர்க்க வேண்டிய ஒன்று எனவும், அது தமது அமைச்சுக்கான விடயம் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட "யுக்திய" நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளமையால் சிறைச்சாலை கள் நிரம்பியுள்ளன என்று தெரிவிக்கப்படும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.