• Nov 26 2024

யாழில் எதிர்கட்சித் தலைவர் சஜித்தால் திறன் விருத்தி வகுப்பறை திறந்துவைப்பு

Chithra / Jun 10th 2024, 3:47 pm
image

  

யாழ்ப்பாணம்   - வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால்   திறன் விருத்தி வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது, இன்று (10.07.2024) இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்காக வருகை தந்த சஜித் பிரேமதாசவின் தலைமையிலான குழுவினர் வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளனர்.

மேலும், திறன் விருத்தி தொலைக்காட்சி மற்றும் 5 கணனிகள் என்பன பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


அதேவேளை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் திறன் விருத்தி வகுப்பறையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திறந்து வைத்துள்ளார். 

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை தொலைக்காட்சி மற்றும் 5 கணினிகளுடன் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 


யாழில் எதிர்கட்சித் தலைவர் சஜித்தால் திறன் விருத்தி வகுப்பறை திறந்துவைப்பு   யாழ்ப்பாணம்   - வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால்   திறன் விருத்தி வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வானது, இன்று (10.07.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்காக வருகை தந்த சஜித் பிரேமதாசவின் தலைமையிலான குழுவினர் வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளனர்.மேலும், திறன் விருத்தி தொலைக்காட்சி மற்றும் 5 கணனிகள் என்பன பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.அதேவேளை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் திறன் விருத்தி வகுப்பறையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திறந்து வைத்துள்ளார். இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை தொலைக்காட்சி மற்றும் 5 கணினிகளுடன் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement