• Jan 07 2025

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்தும் செயற்பாட்டை கண்டிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.!

Chithra / Jan 5th 2025, 8:44 am
image

 

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்தும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த ஏதிலிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், துன்புறுத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாட்டிற்கு அவர்களை அனுப்புவது, சர்வதேச கொள்கைகளை மீறும் செயலாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பாதுகாப்பான நாட்டில் மீள்குடியேற்றப்படும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்திற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, இரக்கம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்த, இது இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும் எடுத்துரைத்துள்ளார். 

2024 டிசம்பர் 19 அன்று முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து  40க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 103 ரோஹிங்கியா ஏதிலிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்தும் செயற்பாட்டை கண்டிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.  மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்தும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறித்த ஏதிலிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், துன்புறுத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாட்டிற்கு அவர்களை அனுப்புவது, சர்வதேச கொள்கைகளை மீறும் செயலாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.எனவே, பாதுகாப்பான நாட்டில் மீள்குடியேற்றப்படும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்திற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.உலகளாவிய மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, இரக்கம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்த, இது இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும் எடுத்துரைத்துள்ளார். 2024 டிசம்பர் 19 அன்று முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து  40க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 103 ரோஹிங்கியா ஏதிலிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement