IMF உடன்படிக்கையின் தவறான புரிதலின் காரணமாக எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் நடைபெறவுள்ள கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆனால் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்ற கல்விமான்கள் எதிர்கட்சித் தலைவருக்கு உண்மைகளை புரிய வைப்பதற்காக கடுமையாக போராடி வருவதாகவும் ஆனால் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவின்றி யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் நாட்டில் பத்தில் ஒரு பங்கை கூட தொடர முடியாது என்பது எதிர்க்கட்சித் தலைவர் இந்த தருணத்தில் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் கையொப்பமிட்ட ஒப்பந்தங்கள் இல்லாமல் எதிர்காலத்தில் யார் அரசாங்கத்தை அமைத்தாலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற அமைப்புகளின் ஆதரவின்றி எவராலும் அரசாங்கத்தை நடத்த முடியாது.
இந்த விடயங்களை ஆழமாக ஆராயாத ஒருவரால் நாட்டில் அரசாங்கத்தை நடத்த முடியாது, நாட்டை கட்டியெழுப்ப முடியாது, நாட்டின் பிரச்சினைகளை அடையாளம் காண முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
IMF உடன்படிக்கையை புரிந்து கொள்ளாத எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது அமைச்சர் பந்துல IMF உடன்படிக்கையின் தவறான புரிதலின் காரணமாக எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இவ்வருடம் நடைபெறவுள்ள கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.ஆனால் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்ற கல்விமான்கள் எதிர்கட்சித் தலைவருக்கு உண்மைகளை புரிய வைப்பதற்காக கடுமையாக போராடி வருவதாகவும் ஆனால் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவின்றி யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் நாட்டில் பத்தில் ஒரு பங்கை கூட தொடர முடியாது என்பது எதிர்க்கட்சித் தலைவர் இந்த தருணத்தில் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.மேலும், அரசாங்கம் கையொப்பமிட்ட ஒப்பந்தங்கள் இல்லாமல் எதிர்காலத்தில் யார் அரசாங்கத்தை அமைத்தாலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற அமைப்புகளின் ஆதரவின்றி எவராலும் அரசாங்கத்தை நடத்த முடியாது.இந்த விடயங்களை ஆழமாக ஆராயாத ஒருவரால் நாட்டில் அரசாங்கத்தை நடத்த முடியாது, நாட்டை கட்டியெழுப்ப முடியாது, நாட்டின் பிரச்சினைகளை அடையாளம் காண முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.