உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள அறுபத்தாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை வழங்குவது குறித்து பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தியுள்ளது.
புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் இது தொடர்பில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, நாடாளுமன்றத்தில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பிற பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற புலனாய்வு அமைப்புகள் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் - களமிறங்கும் புலனாய்வு அமைப்புகள் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள அறுபத்தாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை வழங்குவது குறித்து பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தியுள்ளது. புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் இது தொடர்பில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படி, நாடாளுமன்றத்தில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பிற பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.அதன்படி, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற புலனாய்வு அமைப்புகள் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.இதன்போது மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.