• Jan 07 2025

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - தயாராகும் எதிர்க்கட்சி

Chithra / Dec 12th 2024, 10:18 am
image

  

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நம்பிக்கை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அல்லது சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - தயாராகும் எதிர்க்கட்சி   சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நம்பிக்கை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அல்லது சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement