• Sep 22 2024

திலீபனின் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு...! கிழக்கு ஆளுநர் முதுகெலும்பற்ற கோழை...! வெழுத்து வாங்கிய வேலுகுமார் எம்.பி..!samugammedia

Sharmi / Sep 20th 2023, 3:49 pm
image

Advertisement

கிழக்கு மாகாண ஆளுநர் முதுகெலும்பற்ற கோழைதனமானவர் என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தத்தை சமாதான முறையில் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று அகிம்சை வழியில் போராடி உயிர் நீர்த்த திலீபன் அவர்களின் ஊர்தி பேரணி மீதும் நாட்டின் உயர்சபையான பாராளுமன்றத்தின் உறுப்பினரான கஜேந்திரன் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான மோதலை ஏற்படுத்துவதற்கான சூட்சுமமான செயற்பாடுகள் அரசுக்கும் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசின் பிரநிதியாக இருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர், செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடுகள் மற்றும் அகிம்சைவாதியான திலீபனை நினைவு கூறுவது சட்டவிரோதமானது என கூறி கண்டனம் தெரிவித்தமை முதுகெலும்பில்லாத அவரின் கோழைதனம் எனவும் அவர் இந்த அறிக்கையை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  கண்டனம் தெரிவித்துள்ளார்

திலீபனின் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு. கிழக்கு ஆளுநர் முதுகெலும்பற்ற கோழை. வெழுத்து வாங்கிய வேலுகுமார் எம்.பி.samugammedia கிழக்கு மாகாண ஆளுநர் முதுகெலும்பற்ற கோழைதனமானவர் என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தை சமாதான முறையில் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று அகிம்சை வழியில் போராடி உயிர் நீர்த்த திலீபன் அவர்களின் ஊர்தி பேரணி மீதும் நாட்டின் உயர்சபையான பாராளுமன்றத்தின் உறுப்பினரான கஜேந்திரன் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான மோதலை ஏற்படுத்துவதற்கான சூட்சுமமான செயற்பாடுகள் அரசுக்கும் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் பிரநிதியாக இருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர், செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடுகள் மற்றும் அகிம்சைவாதியான திலீபனை நினைவு கூறுவது சட்டவிரோதமானது என கூறி கண்டனம் தெரிவித்தமை முதுகெலும்பில்லாத அவரின் கோழைதனம் எனவும் அவர் இந்த அறிக்கையை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  கண்டனம் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement